Archive for the ‘ஔவையார்’ Category

ஔவையாரைப் பற்றி திடீரென்று “டமால்” தகவல், “குபுக்” சர்ச்சை, ‘திடுக்’ தகவல், “குபீர்”ஆராய்ச்சி!

நவம்பர் 14, 2013

ஔவையாரைப் பற்றி திடீரென்றுடமால்” தகவல், “குபுக்” சர்ச்சை, திடுக்தகவல், “குபீர்”ஆராய்ச்சி!

ஔவையார் கற்பனை சித்திரம்

அவ்வையார் எத்தனை பேர்? நீண்டகாலம் கழித்து கல்விதுறைதிடுக்தகவல்[1]: தமிழர்களை நினைத்தாலே சிலிர்க்கிறது உடம்பு. ஔவையை, திருவள்ளுவரைக் கேவலப்படுத்தும் போது[2], கண்டு கொள்ளாதவர்கள்[3], அவ்வப்போது, இப்படி, திடீரென்று கிளம்பி விடுவர் போலும்! தமிழக அரசின், ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், ‘இரு அவ்வையார் இருந்தனர்’ என, தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சங்க காலத்தைச் சேர்ந்த, மிகச் சிறந்த பெண்பாற் புலவர், அவ்வையார். தமிழிலும், அரச நிர்வாகத்திலும், நிறைந்த அறிவைப் பெற்றவர். தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்[4]. இப்படியிருந்தும், ஔவைகள் எத்தனை பேர் என்று சந்தேகம் வந்து விட்டதாம்!

ஔவையார் கற்பனை சித்திரம்-பாத்திரம்தமிழ் பாடபுத்தகங்களில் இரு ஔவையார்கள் உள்ளனர் என்றுள்ளாதாம்: அறிவிற் சிறந்த அவ்வையார், நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக, அவருக்கு, அதியமான் நெல்லிக்கனி கொடுத்ததும், திருவிளையாடல் புராணத்தில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்தும், தமிழ் பாட புத்தகங்களில் இடம் பெறுகின்றன. அவ்வையார் எழுதிய, ‘ஆத்திச்சூடி’ பாடலும், தமிழ் பாட புத்தகத்தில் இடம் பெறுகிறது.பல ஆண்டுகளாக, கல்வித் துறை வெளியிட்ட பாட புத்தகங்களில், ‘அவ்வையார் என்பவர், ஒருவரே’ என, பொருள் படும் வகையில், கருத்துக்கள் இடம் பெற்றன.தற்போது, ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் (இரண்டாம் பருவம்), திடீரென, ‘அவ்வையார், ஒருவர் அல்ல; இரு, அவ்வையார்கள் இருந்தனர்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.புத்தகத்தின், 32வது பக்கத்தில், ஆசிரியர் குறிப்பு என்ற தலைப்பின் கீழ், ‘அவ்வையார், சங்கப் புலவர்; அதியமானின், நண்பர்; அரிய நெல்லிக்கனியை, அதியமானிடம் பெற்றவர். சங்க காலத்தி்ல், பல பெண் கவிஞர்கள் இருந்தனர். இவர்களில், அதிக பாடல்களை பாடியவர், அவ்வையார். சங்கப்பாடல் பாடிய அவ்வையாரும், ‘ஆத்திச்சூடி’ பாடிய அவ்வையாரும் ஒருவர் அல்ல; வேறு வேறானவர்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் தகவலால் மாணவர்களும்,  பெற்றோரும்,  அதிர்ச்சி அடைந்துள்ளனராம்!: இத்தனை ஆண்டு காலமாக, அவ்வையார் எத்தனை பேர்; அவர்களைப் பற்றிய முழுமையான வரலாறு; அவர்கள் பாடிய பாடல்கள் என, விளக்கமாக, எந்த தகவலையும் வெளியிடாமல், இப்போது, திடீரென, ‘இரு அவ்வையார்கள் இருந்தனர்’ என, கல்வித் துறை தெரிவித்துள்ளது.இந்த தகவலைப் பார்த்து, மாணவர்களும், பெற்றோரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவையைச் சேர்ந்த, பெற்றோர், அசோக் கூறியதாவது:என் மகள், ‘அவ்வையார், எத்தனை பேர்?’ என, என்னிடம் கேட்டாள். ‘ஒருவர் தான்’ என, கூறினேன். இல்லை, ‘இரண்டு பேர்’ என, புத்தகத்தை காட்டினாள். ஓய்வுபெற்ற தொழிலாளர் நல ஆய்வாளரான, என் தந்தையிடம் கேட்டதற்கு, அவரும், ‘அவ்வையார் ஒருவர் தாண்டா…’ என, கூறினார்.நான் படித்தபோதும், ஏன், நாம் அனைவரும் படிக்கும்போது, அவ்வையார் ஒருவர் தான் என்பதைப் போல், புத்தகங்களில் கூறப்பட்டிருந்தன.இப்போது, திடீரென, ‘இரு அவ்வையார்’ என, கல்வித் துறை கூறியுள்ளது வியப்பளிக்கிறது. உண்மையிலேயே, அவ்வையார் எத்தனை பேர் என்பதை, கல்வித் துறை தெளிவுபடுத்த வேண்டும்.

விளக்குமா கல்விதுறை – தினமலர் கேட்கிறது : இருவரோ அல்லது இருவருக்கு மேற்பட்டவரோ இருந்தனர் எனில், இத்தனை ஆண்டுகளாக, இந்த விவரங்களை, பாட புத்தகங்களில் வெளியிடாதது ஏன் என்பதையும், கல்வித் துறை விளக்க வேண்டும்.இவ்வாறு, அசோக் கூறினார். இது குறித்து, சென்னை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றின், மூத்த முதுகலை தமிழ் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘ஓய்வுபெற்ற பேராசிரியர், கோவிந்தராஜன் எழுதிய புத்தகத்தில், நான்கு அவ்வையார் இருந்ததாக, குறிப்பிடப்பட்டுள்ளது. சங்ககால அவ்வையார், திருவள்ளுவர் சகோதரியான ஒரு அவ்வையார் உட்பட, நான்கு பேர் என, குறிப்பிடப்பட்டுள்ளனர். உண்மையில், அவ்வையார் எத்தனை பேர் என்பதற்கு, ஆதாரப்பூர்வமான சான்றுகளோ, நுால்களோ இல்லை’ என, தெரிவித்தார்.

மூன்று பேர் இருந்தனர் – ஒரு பேராசிரியர் கூறுகிறாறாம்!: பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ‘சங்க கால அவ்வையார், ஆத்திச்சூடி பாடலை எழுதிய அவ்வையார், நீதி நுால்களை எழுதிய அவ்வையார் என, மூன்று பேர் இருந்தனர்’ என்றார்.தமிழ் ஆசிரியர், கல்லூரி பேராசிரியர் அளவிலேயே, அவ்வையாரைப் பற்றி, இவ்வளவு குழப்பங்கள் இருப்பதற்கு, அவ்வையாரைப் பற்றிய முழுமையான ஆய்வுகள் நடக்காததும், அது குறித்த ஆய்வு அறிக்கைகள் வெளி வராததும் தான் காரணம் என்பது தெளிவாகிறது.’மேல் மட்ட அளவிலேயே, இவ்வளவு குழப்பங்கள் இருந்தால், பள்ளி மாணவர்களுக்கு, எப்படி சரியான தகவல்களை தர முடியும்…, வருங்கால துாண்களாக இருக்கும் மாணவ சமுதாயத்திற்கு, எந்த விஷயமாக இருந்தாலும், அதைப்பற்றி, முழுமையாக, தெளிவான தகவல்களை தர வேண்டும். இதற்கு, சம்பந்தப்பட்ட அரசு துறைகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்விகிகொடுக்கும்பட்டியல்ஔவையார் 6 பேர், காலவரிசை[5]:

எண் குறியீடு காலம் பாடல் பாடல் பெற்றோர் வரலாறு
1 சங்க காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன் அகம்புறம்,நற்றிணை,

குறுந்தொகை

சேர சோழ பாண்டியர், நாஞ்சில் வள்ளுவன் முதலானோர் அதியமானுக்கு நெல்லிக்கனி
2 இடைக்காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் மூவேந்தர் அங்கவை சங்கவை மணம்
3 சோழர் காலம் 12-ஆம் நூற்றாண்டு ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,

நல்வழி,

மூதுரை,

அசதிக்கோவை

சோழர், அசதி அசதி, விக்கிரம சோழன்
4 சமயப் புலவர் 14-ஆம் நூற்றாண்டு ஔவை குறள்,விநாயகர் அகவல் விநாயகர் அகவல் பாடல்கள்
5 பிற்காலம் – 1 16, 17-ஆம் நூற்றாண்டு தமிழறியும் பெருமான் கதை
6 பிற்காலம் – 2 17, 18-ஆம் நூற்றாண்டு பந்தன் அந்தாதி பந்தன் என்னும் வணிகன் பந்தன் செய்த சிறப்புகள்

தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த வரைக்கும், இன்று வரை “கிரிடிகல் எடிஷன்” என்ற ரீதியில் இருக்கின்ற எல்லா ஓலைச்சுவடிகளையும் சோதித்து, நன்றாக ஆராய்ச்சி செய்யப் பட்டு, இடைச்செருகள் கண்டுபிடிக்கப் பட்டு, இப்படித்தான் மூலநூல் இருந்திருக்கக் கூடும் என்று யாரும் செய்யவில்லை, பதிப்புகளும் வெளிவரவில்லை. 17ம் நூற்றாஸ்ண்டிலிருந்து, தமிழைப் படித்து, தமிழில் பைபிளை வெளியிட வேண் டும் என்று வந்த கிருத்துவ மிஷனரிகள் ஏகப்பட்ட ஓலைச்சுவடி நூல்களை எடுத்துச் சென்றனர். பதிலுக்கு போலி நூல்களை எழுத வைத்து புழக்கத்தில் விட்டனர். 19-20 நூற்றாண்டுகளில், குறிப்பாக ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து செல்வதற்கு முன்னர், தமிழ் பண்டிதரெகளை வைத்துக் கொண்டு, ஏராளமான இடைச்செருகல்களை செய்தனர். மூலங்களை எடுத்துச் சென்று விட்டனர் அல்லது மறைத்து விட்டனர். நான் சித்தர்-ஆராய்ச்சி பற்றி எழுதியுள்ளவை இதற்கும் பொருந்தும்[6].

ஓலைச்சுவடிகள், நகல்கள், பதிப்பிக்கப்படாதவை[7]: கோபன்ஹேகன் (டென்மார்க்), பாரிஸ் (பிரான்ஸ்), பெர்லின் (ஜெர்மனி), டப்லின் (அயர்லாந்து), ரோம் (இத்தாலி), ஆம்ஸ்டெர்டாம் (நெதர்லாந்து), லிஸ்பன் (போர்ச்சுகல்), லண்டன் (இங்கிலாந்து) முதலிய நாடுகளிலுள்ள நூலகங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள் முதலியவையுள்ளன[8]. இவை ஆராய்ச்சியாளர்களுக்கு எட்டப்படாத நிலையில் உள்ளன. அவற்றைப் பார்க்க, படிக்க, நகல் எடுக்க ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செல்வழிக்க வேண்டியுள்ளது. இதனாலேயே ஆராய்ச்சியாளர்கள் செலவிற்கு பயந்து, இரண்டாம்தர மூலங்களை அதாவது பதிக்கப்பட்ட புத்தகங்களை நாடவேண்டியுள்ளது. இவற்றில்தான் பாரபட்சம், விருப்பு-வெறுப்பு, சித்தாந்தம் முதலிய வேறுப்பாடுகள் வருகின்றன. அவற்றினால் உண்மைகளை மறைத்தல், திரித்து / மாற்றி எழுதுதல், வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் காட்டுதல் – மற்றவற்றை மறைத்தல், தமது கருத்தேற்றி எழுதுதல் முதலியவை வருகின்றன[9]. இந்த வகையில் “சித்தர்களிலும்” ஒரு “ஔவையாரை”ச் சேர்த்துள்ளனர்!

ஐரோப்பியர்கள் ஒலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றது[10]: ஐரோப்பியர்களின் ஆட்சி காலங்களில், தென்னிந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்கள், மரப்பட்டை நூல்கள், துணிப் படங்கள், கருவிகள், உபகரணங்கள் முதலியன அவரவர் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பதிலுக்கு கையினால் காகிதங்களில் எழுதப் பட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டன. ஆனால், எடுத்துச் செல்லப்பட்ட எல்லாவற்றிற்கும் நகல்கள் அவ்வாறு எழுதிவைக்கப் படவில்லை. மெக்கன்ஸி சேகரிப்பே அதற்கு ஆதாரம். இருப்பினும் ஆற்றில் ஓலைச்சுவடிகளைப் போட்டார்கள், அதனால், தமிழ் நூல்கள் பல அழிந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது. அந்நியர்கள் அவ்வாறு எடுத்துச் செல்லாமல் இருக்க ஆற்றில் போட்டார்களா, பழைய செல்லரித்த ஓலைகளைப் போட்டார்களா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. கடந்த 100-200 ஆண்டுகளில் சித்தர்களின் பெயரில் பற்பல போலி நூல்கள் எழுதப் பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன[11]. சில குழுமங்கள் ஆவணக் காப்பகங்கள் முதலிய இடங்களினின்றே அத்தகைய போலிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளன. இன்றும் அத்தகைய நூல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஔவையாரும்வாடாதவூரும்[12]: ஔவையார் என்ற பெயரில் பல புலவர்கள், பல்வேறு காலத்தில் – திருவள்ளுவர் காலத்திலிருந்து இடைக்காலம் வரை – இருந்திருக்க வேண்டும்[13]. இல்லை, பல்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்கள், தாங்கள் இயற்றிய பாடல்களை, ஔவையார் பெயரில் புழக்கத்தில் விட்டிருக்க வேண்டும். ஏனெனில் அத்தகைய பாலல்கள் “தனிப்பாடல் திரட்டு”களில் கூட காணப்படுகின்றன. எனவே, இவ்வூரை ஔவையார் “வாடாதவூர்” என்று குறிப்பிட்டார் என்பதற்கு எந்த சான்றுள்ளது என்று தெரியவில்லை. தமிழர்கள், இப்பொழுதெல்லாம் எந்த வார்த்தையையும் தமிழில் படித்து விளக்கம் கொடுக்க வல்லமையைப் பெற்றிருக்கிறார்கள்.

அரசவம்சாவளி, குருபரம்பரை, புலவர்பாரம்பரியம்: இந்திய சரித்திரத்தில் அரச வம்சாவளி, குரு பரம்பரை, புலவர் பாரம்பரியம் முதலியவை காலக்கணக்கீட்டியலில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் “பெயரன்” என்ற சம்பிரதாயத்தில், பேரன் தாத்தாவின் பெயரைக் கொண்டுள்ளதும் வழக்கம். இல்லை, ஒரு அரசன் புகழ் பெற்றுவிட்டால், அவனுக்குப் பிறகும், அப்புகழ் தொடரும் போது, தொடர்ந்து வரும் சந்ததியரும் அதே பெயரைக் கொண்டு அரசாட்சி செய்வர்[14]. அதே போலவே, ஒரு குரு, சன்னியாசி, ஆச்சாரியர் புகழ் பெற்றுவிட்டால், மடம் தோற்றுவிக்கப் பட்டு, அவருக்குப் பிறகு வருபவர்கள் அப்பெயரைப் பட்டம் போன்று உபயோகித்து வருவர். இது “ஆசிரமம்” என்ற சம்பிரதாயத்திலும் தொடரும்[15]. அதேபோலத்தான் புலவர்களும். அம்முறையில் தான் “ஔவையார்” பல நூற்றாண்டுகளில் காணப்படுகிறார்.

© வேதபிரகாஷ்

14-11-2013


[1] தினமலர் நிருபர், அவ்வையார்எத்தனைபேர்? நீண்டகாலம்கழித்துகல்விதுறைதிடுக்தகவல் , பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2013,00:02 IST

[13] ம.பொ.சிவஞானம், ஔவையார்?, என்ற நூலில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஔவையார்கள் இருந்திருக்கக் கூடும் என்று எடுத்துக் காட்டியுள்ளார்.

[14] குலோத்துங்கன் – 1, 2, 3 என்று இருந்ததைப் போல – ஏனெனில், எல்லோருக்கும், மூன்று மன்னர்கள் அவ்வாறு ஆண்டார்கள் என்ற உண்மை தெரியும்.

[15] எல்லா இடத்திலும், அகத்திய ஆசிரமம் இருக்கலாம், அங்கு அகத்தியரும் இருக்கலாம். ஆனால், ஒரே அகத்தியர் இருந்தார் என்பதாகாது. அதாவது, ஒரே அகத்தியர் 5000, 10,000 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்றாகாது. வருக்குப் பிறகு, அவரது வழிவருபவர்கள், அவ்வாறு நியமிக்கப் பட்டவர்கள், அதே பெயரில் / பட்டத்தில் இருந்து வருவர்.